தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 411
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒற்றை இலக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது
குறிப்பாக நேற்று ஒரே நாளில் 172 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று மட்டும் 102 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 414 உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இதுவரை 3684 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களில் தற்போது 411 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இன்னும் 484 பேர்களுக்கு சோதனையின் முடிவு வரவேண்டியுள்ளது என்பதும் அவர்களின் முடிவு வந்தால் இன்னும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
#CODVID19 TN STATS 03.04.20:
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 3, 2020
Screened Passengers: 2,10,538
Beds in Isolation Wards: 23,689
Ventilators: 3,396
Current Admissions:1,580
Samples Tested: 3,684 (Negative:2789, Positive: 411 (Discharged:7), Under Process: 484)
#TN_Together_AgainstCorona @MoHFW_INDIA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments