விஜயகாந்த் வீட்டில் நடந்த 100வது பிறந்தநாள் விழா.. உறவினர்கள் வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜயகாந்த் வீட்டில் நடந்த 100வது பிறந்தநாள் விழாவுக்கு விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கேப்டன் ஆகவும், அரசியலில் கம்பீரமாகவும் வலம் வந்தார் விஜயகாந்த். அவர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி அரசியல் மூலம் ஏழை எளிய மக்களின் வித்தியாசமான தலைவராக கருதப்பட்டார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் தந்தை அழகர்சாமியின் 100வது நாள் பிறந்த நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விஜயகாந்தின் உற்றார் உறவினர்கள் சுற்றத்தார் என அனைத்து உறவினர்கள் கலந்து கொண்டனர் என்பதும் சிறப்பாக இந்த பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜயகாந்த் தந்தையின் 100 வது பிறந்த நாளில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இல்லத்தில் இலவச உணவுகள் வழங்கப்பட்டது. தனது தாத்தா அழகர்சாமியின் நூறாவது பிறந்த நாள் குறித்த புகைப்படங்களை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com