காதலர் தினத்தில் 10 ஆயிரம் மாணவர்களிடம் உறுதிமொழி பெற்ற அமைப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

இந்தியாவின் ஒருசில பகுதிகளில் 'காதலர் தினத்தன்று சுற்றித்திரியும் ஜோடிகளை பிடித்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் அராஜகம் நடந்து வரும் நிலையில் காதலர் தினத்தில் சுமார் 10 ஆயிரம் மாணவர்களிடம் பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் செய்வோம் என்ற உறுதிமொழியை ஒரு பிரபல அமைப்பு பெற இருக்கின்றது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஹஸ்யமேத்வா ஜயதே என்ற அமைப்பு நாளை காதலர் தினத்தன்று வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மாணவ மாணவியர்களிடம் “பெற்றோர்கள் சம்மதம் இன்றி கல்யாணம் இல்லை” என்று உறுதிமொழியை பெறவுள்ளது. இதற்கு அனைத்து மாணவ, மாணவிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

காதலர்களாக இல்லாமல் சிங்கிளாக இருப்பவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர்களிடம் அராஜகமாக நடந்து கொள்ளாமல் அறிவுரையாக சொல்லும் இந்த அமைப்பின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.