10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அரசு  உத்தரவு: அதிர்ச்சி காரணம்

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

சுமார் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஒட்டகங்கள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் இதனால் சுமார் பத்தாயிரம் ஒட்டகங்களை ஹெலிகாப்டர் மூலம் கைதேர்ந்த துப்பாக்கி சுடும் வல்லுனர்களால் சுட்டுக்கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த ஒட்டகங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிக அளவு இருப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மில்லியன் ஒட்டகங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 4 லட்சம் கார்களில் இருந்து வெளியாகும் புகையின் அளவை விட அதிகமாக இருப்பதாகவும் இதனால் இந்த ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.