மும்பையில் 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!!! அச்சமூட்டும் கடத்தல் பின்னணி!!!
- IndiaGlitz, [Monday,August 10 2020]
நவி மும்பையில் உள்ள நவ சேவா துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுடன் வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 1,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு கடத்தல் பின்னணி குறித்த விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைந்து 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது நடைபெற்ற விசாரணையில் போதைப் பொருட்களை ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்ததாக கடத்தல் காரர்கள் கூறியுள்ளனர். கடத்திக் கொண்டு வரப்பட்டப் பொருட்கள் துறைமுகத்தில் உள்ள பைப்புகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பைப்புகளை சுங்கத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது இந்த கடத்தல் வழக்கு அம்பலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.