கட்டிலில் வந்து ஜனநாயகக் கடமை ஆற்றிய 100 வயது முதியவர்… பீகார் தேர்தலில் நிலவும் பரபரப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பீகார் சட்டசபைக்கான இறுதிகட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதிஹார் வாக்குச்சவாடியில் 100 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் கட்டிலில் படுத்த படியே தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறார். இந்நிகழ்வைக் குறித்து இந்தியாவில் ஜனநாயகம் நீடித்து நிலைபெறுவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது எனப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சுகதேவ் மண்டல் எனும் 100 வயது கடந்த தாத்தாவை சிலர் கட்டிலில் தூக்கிய படியே கதிஹார் தொகுதி வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர். அவர் தன்னுடைய வாக்கை அளித்து விட்டு மீண்டும் கட்டிலில் படுத்த படியே திரும்பி சென்றார். இந்த வீடியோ இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டச்சபைக்கான சட்டமன்றத் தேர்தல் 3 கட்டமாக நடைபெற்று வருகிறது.
அதன் முதற்கட்டத் தேர்தல் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி 71 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்றது. அந்தத் தேர்தலில் 55.69% வாக்குகள் பதிவானதாக தேர்தல் குழு அறிவித்து இருக்கிறது. அடுத்து கடந்த 3 ஆம் தேதி 94 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. அதில் 55.51% வாக்குகள் பதிவானதாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து 3 ஆம் கட்டம் மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் இன்று பீகாரின் 78 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 3 மணி நிலவரப்படி 45.85% வாக்குகள் பதிவானதாக தேர்தல் குழு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் கதிஹார் தொகுதியில் 100 வயதைக் கடந்த முதியவர் தன்னுடைய இயலா நிலையிலும் கட்டிலில் படுத்த படியே வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். இந்தத் தகவல் அப்பகுதியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments