மியான்மரில் வேலை செய்துகொண்டிருந்த 100 தொழிலாளர்கள் பலி!!! பரபரப்பு சம்பவங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில் ஹபகண்ட் என்ற பகுதியில் மாணிக்கக் கற்களை தோண்டி எடுக்கும் ஒரு பிரபலமான சுரங்கம் செயல்பட்டு வருகிறது. ஜேட் என அழைக்கப்படும் அந்தச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் இன்று காலை, பரபரப்பாக கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் பல தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக அமுங்கி அப்படியே உயிரிழந்து உள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 100 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் அதிகாரிகள் தரப்பு கூறியிருக்கிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டு வந்ததாகவும் இந்த மழைப் பொழிவினால் திடீரென சுரங்கத்தில் கற்கள் சரிந்து இந்த கோர விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த ஒரு தொழிலாளி நிலச்சரிவு குறித்து “ சுரங்கத்தின் மேற் பகுதியில் திடீரென ஒரு பெரிய சத்தம் கேட்டது. ஓடுங்கள்... ஓடுங்கள் என எச்சரிக்கை குரல்களை மேல் இருந்த தொழிலாளர்கள் எழுப்பினர். கற்கள் எல்லாம் சுரங்கத்துக்குள் சரிந்து விழுந்தது. அடுத்த கனமே சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக புதைந்து போனார்கள். எதையும் செய்ய முடியவில்லை” எனத் தெரிவித்து இருக்கிறார்.
அப்பகுதியில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் சொல்லப்படுகிறது. மியான்மரில் இதுபோன்ற சுரங்கள் அதிகமாக இயங்கி வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வது இயல்புதான். ஆனால் இந்த நூற்றாண்டிலே இது மிகப்பெரிய விபத்து என்று மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரி ஒருவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா பரவல் உலகையே ஆட்டிப் படைக்கிறது என்றால் இன்னொரு பக்கம் மழை வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவின் தென் பகுதியில் பெய்த மழையால் 60 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவிலும் ஆம்பன் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் இந்தியாவின் கிழக்கு மாநிலங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. தற்போது மியான்மரில் 100 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments