100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த,  “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”: ZEE5 தளத்தில் சாதனை

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவான ஆக்சன் கமர்ஷியல் திரைப்படமான “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படமும் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

2023 ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான இப்படம், குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழில் முன்னை ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களுக்குத் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை விருந்தளித்து வருகிறது. ZEE5 தளம். திரையரங்கில் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள், ஓடிடியிலும் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. பொதுவாக உணர்வுப்பூர்வமான கதைகள் கொண்ட இவ்வகை திரைப்படங்கள், குறிப்பாக குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் பெரியளவில் மதிப்பைப் பெற்று வருகின்றன.

முன்னதாக திரையரங்குகளில் வெளியான பின்பும், அகிலன், காஃபி வித் காதல் மற்றும் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் தமிழரசன் படங்கள் 100 மில்லியன் பார்வை நிமிடங்களுக்கும், அதிகமான பார்வை எண்ணிக்கைகளைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.

தற்போது ZEE5 தளத்தில் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், தமிழரசன் ஆகிய படங்கள் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து மேலும் பார்வை நிமிடங்களைக் குவித்து சாதனை படைத்து வருகிறது. திரையரங்கில் வெளியான பின்பும் கூட, இந்தப்படங்களை ஓடிடியில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஓடிடிக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. அதிலும் ZEE5 தளம் தமிழில் அதிக வெற்றிகரமான படைப்புகளுடன் முன்னணியில் இருந்து வருகிறது.

எண்ணற்ற வெற்றிப்படைப்புகளை கொண்டிருக்கும் ZEE5 தளம் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய வெப் சீரிஸ்களுடன் கூடிய தனது அடுத்த கட்ட படைப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளது. ZEE5 உடன் கொண்டாடுங்கள்.
 

More News

ஒருவழியாக உறுதியாகிறது 'குற்றப்பரம்பரை'.. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்ற நாவலை படமாக்க இயக்குனர் மையம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் பாலா போட்டி போட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக இந்த படம் உருவாக

செம்ம ஸ்மார்ட்டான கெட்டப்புக்கு மாறிய விஜய் சேதுபதி.. இந்த படத்திற்காகவா?

நடிகர் விஜய் சேதுபதி ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது கெட்டப்பை மாற்றி மிரட்டி வருகிறார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஜவான்' படத்தின் கெட்டப்[ மிரள வைத்தது என்பதும் தெரிந்ததே

தனுஷின் அடுத்த படத்தில் இணையும் 4 பிரபலங்கள்.. வேற லெவலில் இருக்கும் போல..!

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்.. 'ஜெயிலர்' படத்தின் முக்கிய அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம்  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சாயிஷா 2 வயதாக இருந்தபோது வாங்கிய கிஃப்ட்.. மகளின் 2வது பிறந்தநாள் பரிசாக கொடுத்த ஆச்சரியம்..!

நடிகை சாயிஷா இரண்டு வயதாக இருந்தபோது அவரது அம்மா வாங்கிய பிறந்தநாள் கிப்ட் தற்போது சாயிஷாவின் மகளின் இரண்டாவது பிறந்தநாளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.