சி.பி.ஐக்கு பெரிய கொம்பு…. தமிழ்நாட்டு காவல் துறைக்கு வெறுமனே வாலா??? நீதிபதிகளின் சுவாரசியமான பதில்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையின் சிறப்பு நிதிமன்ற பாதுகாப்பில் இருந்த 100 கிலோ தங்கம் மாயமாகி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்த விசாரணையில் சி.பி.ஐ மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறிய அதிகாரிகளுக்கு மேலும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் சி.பி.ஐக்கு பெரிய கொம்புகள் இருக்கிறதா? அல்லது தமிழகக் காவல் துறையினருக்கு வெறுமனே வால் மட்டும்தான் இருக்கிறதா? என்று அதிரடியான கேள்வியையும் எழுப்பி உள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் சுவாரசியங்கள் ஒளிந்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சென்னையில் உள்ள தனியார் தங்கம் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் முறைகேடு நடப்பதாக கடந்த ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அந்த வழக்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்தை சென்னை சிறப்பு நீதிமன்ற பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டு சி.பி.ஐ அதிகாரிகள் வழக்கை முடித்து வைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் தங்கம் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் கடன் தொகை மேலும் அதிகரித்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திரும்ப கொடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
அந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திரும்ப ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீதிமன்ற பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட தங்கத்தில் 100 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் கருத்துக் கூறிய அரசாங்க அதிகாரிகள் ஒருவேளை சிபிஐ அதிகாரிகள் விசாரணையின்போது எடை கூடுதலாக மதிப்பிட்டு இருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள் மாயமாகி இருப்பது 1 கிலோ அல்லது 2 கிலோ இல்லை. இதுகுறித்து முறையாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனப் பதில் அளித்தனர். இதைக் கேட்ட அதிகாரிகள் மேலும் சிபிஐ மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது எனக் கருத்துக் கூறினர். இந்தக் கருத்தைக் கேட்ட நீதிபதிகள் மேலும் கோபமடைந்து சி.பி.ஐக்கு மட்டும் கொம்புகள் இருக்கிறது, தமிழ்நாட்டு காவல் துறைக்கு வெறுமனே வால் இருக்கிறது எனக் கூற முடியாது. எனவே காணாமல் போன தங்கத்தை பற்றி முறையாக சிபிசிஐடியில் வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளிடம் முறையாக விசாரணை மேற்கொள்ளுங்கள் என உத்தரவிட்டனர். இந்நிலையில் 100 கிலோ மாயமான தங்கத்தின் விவாதம் உயர் நீதிமன்ற நீதிபதிகளிடையே கடும் சுவாரசியத்தை வரவழைத்து இருக்கும் எனலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments