ஜிவி பிரகாஷின் '100% காதல்' சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Thursday,December 20 2018]

தமிழ் சினிமாவுலகில் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை ரிலீஸ் செய்து வரும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த 'நாச்சியார்', 'செம' ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே இந்த ஆண்டு வெளியாகிவிட்டது. மேலும் அடுத்த வாரம் ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்த இன்னொரு படமான '100% காதல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கும் தயாராகிவிட்டது. இந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர், ஜெயசித்ரா, ரேகா, மனோபாலா, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்.எம்.சந்திரமெளலி இயக்கியுள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரியில் காதலர் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

விஸ்வாசம்: தல்லே தில்லாலே பாடல் விமர்சனம்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே

சென்னையில் 2018ஆம் ஆண்டில் பெஸ்ட் வசுல் செய்த படங்கள்!

2018ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த பத்து திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

'சீதக்காதி'க்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 25வது படமான 'சீதக்காதி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

'பேட்ட'யை அடுத்து சன்பிக்சர்ஸின் அடுத்த பட ரிலீஸ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

அன்று எந்த முதலமைச்சரிடம் சென்றீர்கள்: கமீலா நாசர் ஆவேசம்

தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த சில மாதங்களாகவே விஷாலுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஒரு குழுவினர் சுமத்தி வந்த நிலையில் நேற்று உச்சகட்டமாக சங்கத்திற்கு பூட்டு போடும்