இரண்டே நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது பாகுபலி
- IndiaGlitz, [Monday,July 13 2015]
இந்திய திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் தற்போது ரூ.100 கோடி வசூல் செய்யும் படங்கள் அதிகரித்து வந்தபோதிலும், கடந்த வெள்ளியன்று ரிலீஸாகிய எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி திரைப்படம், இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து, இதுவரை இந்தியாவில் வெளிவந்த படங்களில் மிக வேகமாக ரூ.100 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது.
இந்திய அளவில் இதற்கு முன்னர் வெளிவந்த 'பிகே, சென்னை எக்ஸ்பிரஸ், 3 இடியட்ஸ், கிக், எந்திரன், தசாவதாரம், விஸ்வரூபம், ரா ஒன் போன்ற பல படங்கள் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. ஆனால் இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படம் இது ஒன்றுதான். இந்த சாதனையை அடுத்து எந்த படமாவது முறியடிக்குமா? என்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் இந்த படம் உலகம் முழுவதிலும் ரூ.115 கோடி வசூல் செய்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.90 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ.25 என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி'க்கு கிடைத்த மாபெரும் வெற்றி தற்போது இந்திய திரையுலக இயக்குனர்களை யோசிக்க வைத்துள்ளது.இந்த அளவிற்கு பிரமாண்டமான படத்தை பார்த்த ரசிகர்கள், இனிவரும் காலங்களில் இதைவிட பிரமாண்டத்தை எதிர்பார்க்க வாய்ப்புள்ளதால், இயக்குனர்கள் அடுத்தடுத்து அதிகளவில் பிரமாண்டமான படத்தை தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.