பிரபல நடிகருக்கு 10 ஆண்டுகள் தடை: அதிரடி நடவடிக்கை!
- IndiaGlitz, [Saturday,April 09 2022]
பிரபல நடிகருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்ற போது தனது மனைவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக் என்பவரை மேடையில் பிரபல நடிகர் வில்ஸ்மித் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் வில்ஸ்மித் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த போதிலும் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் அகடமி, ‘அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு ஆஸ்கார் விருதுகள் மற்றும் அதன் சார்ந்த விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.