2500 கிமீ, 93 நாட்கள்: பாட்டியை சந்திக்க நடந்தே சென்ற 10 வயது பேரன் 

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில் லட்சக்கணக்கானோர் தங்களுடைய சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கான கிமீ நடந்தே சென்றனர். குறிப்பாக இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் வரை தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது பாட்டியை சந்திப்பதற்காக மூன்று நாடுகள் கடந்து 2500 கிலோ மீட்டர் நடந்து சென்ற 10 வயது சிறுவன் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இத்தாலியை சேர்ந்த 10 வயது சிறுவன் ரோமியோ காக்ஸ் என்பவர் தனது தந்தையுடன் இணைந்து இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு நடந்தே சென்று உள்ளார்.

இவர் பயணம் செய்த நாட்கள் 93 நாட்கள் என்றும், பயணம் செய்த தூரம் 2500 கிலோ மீட்டர் என்றும் தெரியவந்துள்ளது. இவர் தனது பயணத்தில் பெரும்பாலும் நடந்து சென்றதாகவும் சில இடங்களில் மட்டும் படகு, சைக்கிள் மற்றும் கழுதை சவாரியில் சென்றதாகவும் தெரிகிறது.

பாட்டியை சந்திப்பதற்காக 2500 கிலோ மீட்டர் நடந்து சென்ற 10 வயது சிறுவனுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

கள்ளக்காதலனை அடைய கர்ப்பிணியை கொலை செய்த இளம்பெண்: அதிர்ச்சி தகவல்

கள்ள காதலனை அடைய வேண்டும் என்பதற்காக அந்த கள்ளக்காதலனின் மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்த இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

5 வயது சிறுமிகளுடன் பாலியல் உறவு: 600 வருடங்கள் சிறைத்தண்டனை 

5 வயது சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்ட 32 வயது நபருக்கு 600 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

லுங்கியை மடித்துகட்டி சிஎஸ்கேவுக்கு ஆதரவு கொடுத்த நடிகை! வைரலாகும் வீடியோ

ஐபிஎல் தொடர் போட்டிகளில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் தோனியின் ரசிகர்களும் சரி, திரை நட்சத்திரங்களும் சரி தொடர்ச்சியாக சிஎஸ்கே கொடுத்து வரும் ஆதரவை

இனி மத்தது எல்லாம் ஓரமாதா நிக்கனும்… கெத்துக் காட்டும் பிரதமர் மோடியின் சிறப்பு விமானம்!!!

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ஆகியோர்

பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவன ஊழியர்கள் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று!!!

கொரோனா தாக்கத்தால் நேரில் சென்று ஷாப்பிங் செய்வோரை விட ஆன்லைனில் ஆர்டர்