கால்பந்து அசுரன் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து வெளி உலகிற்கு தெரியாத சில தகவல்கள்!

கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற பெயரைக் கேட்டாலே ரசிகர்களுக்கு மின்னல்வேக கோல்களும் அசுரத்தனமான உக்திகளும்தான் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு தன்னுடைய விளையாட்டு திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் இவர் ஒரு காலத்தில் விளையாடினால் இறந்து போவார் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட கொடுமை நமக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஏன் கருவிலேயே சாக வேண்டியவர்தான் இந்த ரொனால்டோ என்பது கூட பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

காரணம் போர்ச்சுக்கலில் இருந்து 1,000 கி.லோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சின்ன தீவில் அதுவும் வீட்டு வேலை செய்து கொண்டு குடும்பத்தை வறுமையில் நடத்தும் மரியா என்ற தாய்க்கும், சதா குடித்துக் கொண்டு குடும்பத்தை கவனிக்காமல் சுற்றிக்கொண்டு இருக்கும் டெனிஷ் எனும் தந்தைக்கும் பிறந்தவர்தான் இந்த ரொனால்டோ. இத்தனை வறுமையிலும் 4 ஆவதாக ஒரு குழந்தை தேவையா? என மரியா ரொனால்டோவை கருவிலேயே கலைக்க எண்ணினாராம். ஆனால் தீவிரக் கத்தோலிக்கராக இருந்த மரியா அதற்கு மனம் வராமல் இவரை பெற்று எடுத்ததோடு அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால் ரீகனின் நினைவாக கிறிஸ்டியானோ ரொனால்டோ டோஸ் சாண்டோஸ் அவிரோ என்று பெயர் வைத்து இருக்கிறார்.

தந்தை டெனிஷ் கால்பந்து மைதானத்தில் தோட்டக்காரராக பணியாற்றியதன் விளைவு கால்பந்து மீதான ஆர்வம் ரொனால்டோவிற்கு வந்தது. வெறும் குப்பைகளையும் பிளாஸ்டிக்குகளையும் வைத்து பயிற்சி எடுத்தவர் ஒரு கட்டத்தில் அதே கால்பந்து கிளப்பில் பயிற்சி எடுக்கவும் தொடங்குகிறார். ஆனால் தோட்டக்காரரின் மகன் என்பதால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியதால் பக்கத்து ஊரில் பயிற்சி எடுத்துக் கொண்டார். இவரது ஆட்டத்தை களத்தில் பார்த்து மிரண்டு போன பயிற்சியாளர்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு இவரைக் கூட்டிச் சென்றனர்.

குடும்ப வறுமை ஒவ்வொரு கணத்திலும் இவரை அழுத்தினாலும் அதற்கெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் தொடர்ந்து விளையாட்டை முழு மூச்சாகக் கொண்டவர் ஆசிரியர் திட்டியதால் படிப்புக்கும் முழுக்கு போடுகிறார். தந்தை குடிகாரராக இருந்தாலும் ரொனால்டோ மீது ஆதித பாசம் வைத்து இருந்ததோடு பெரிய வீரராக வேண்டும் என்று தினமும் கனவு காணுகிறார். இந்த கனவை உண்மையாக்க வேண்டும், அதோடு வறுமையை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த ரொனால்டோ தன்னை தேர்ந்த போட்டியாளராக மாற்றிக் காட்டுகிறார். ஆனால் விதி 13 ஆவது வயதில் இதயக் கோளாறாக குறுக்கிடுகிறது. அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு இனிமேல் கால்பந்தை மறந்துவிட வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்க, உயிரே போனாலும் கால்பந்து விளையாடாமல் இருக்க மாட்டேன் என்று சபதம் எடுக்கிறார்.

அப்படியே செயல்படவும் ஆரம்பிக்கிறார். இதயப் பிரச்சனையில் இருந்து மீண்டுவந்த அவர் லிஸ்பன் பயிற்சி, போர்ச்சுக்கல் கிளப் என்று அடுத்தடுத்து வளர்து, 2006 இல் இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பைக்கும் தேர்வாகிறார். ஆனால் அந்தக் கணத்தில்தான் பாசக்காரத் தந்தை இறந்துவிட்ட செய்தி அவருக்கு கிடைக்கிறது. இதனால் அழுது புரண்டு ஊருக்கு திரும்புவார் என எதிர்ப்பார்த்தபோது தந்தையின் கனவுக்காக உலக் கோப்பையில் கலந்து கொண்டு தனது வெறித்தனமான ஆட்டத்தை வெளிக்காட்டுகிறார்.

ஆனால் களத்தில் நடந்ததோ வேறு, கால்பந்து களத்தில் ரொனால்டோவிற்கு அடிபட, இவர் நடிக்கிறார் என்று சொந்த அணியினரே அவரை கை விடுகின்றனர். இதனால் சொந்த ஊர் ரசிகர்கள் கூட ரொனால்டோவிற்கு எதிராக வெறுப்பை தூற்ற, இதற்கு எல்லாம் தனது விளையட்டு பதில் சொல்லும் என முடிவெடுக்கிறார் ரொனால்டோ. அதில் இருந்து கால்பந்து களத்தில் இறங்கிவிட்டால் வெறித்தனம், அசுர வேகம், மற்ற வீரர்களிடம் இருந்து மாறுபட்ட உக்தி என்று எல்லாம் ஒன்றுசேர இவரை கால்பந்து ஜாம்பவனாக தற்போது மாற்றி இருக்கிறது.

வறுமயின் கோரப்பிடியில் சிக்கி அதிலேயே உழன்று போய்விடாத ஒரு அசுரன் இன்றைக்கு 57 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆண்டுதோறும் விளையாடி வருகிறார். ஆனாலும் தான் கடந்து வந்த பாதையை ஒருபோதும் மறக்காத இவர், தன்னுடைய அப்பாவிடம் இருந்து கற்றப் பாடத்தால் இதுவரை மதுவை கையால் தீண்டவில்லை. சிறுவனாக இருந்தபோது ஒரு சிறுதுண்டு பீட்சாவிற்காக டாமினோஸ் பின்புறத்தில் காத்திருந்தவருக்கு ஒரு பெண்மணி கொடுத்து உதவினாராம். அதை மனதில் ஏற்றிக்கொண்ட ரொனால்டோ இன்றைக்கு மாறு வேடங்களில் சென்று பல ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு உதவி வருகிறார்.

அதோடு ரத்ததானம் செய்வதில் விருப்பம் கொண்ட ரொனால்டோ அந்நாட்டு செஞ்சிலுவை சங்கத்தின் சட்டத்தின்படி பச்சை குத்திக் கொண்டால் 4 மாதத்திற்கு ரத்ததானம் செய்யமுடியாது. இதனால் இதுவரை ஒரு சிறுதுளி பச்சையைக் கூட உடலில் குத்திக் கொள்ளாதவர். ரத்ததானம் மட்டும் அல்லது எலும்பு மஜ்ஜையை கூட ஒருமுறை தானம் செய்து இருக்கிறார். வறுமையின் பிடியில் சிக்கி ஸ்பீனிக்ஸ் பறவையாக தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறிய ரொனால்டோ சமூக பிரச்சனைக்காக கால்பந்து களத்தில் நின்று கொண்டே பலமுறை குரல் கொடுத்து இருக்கிறார். இதனால் விளையாட்டு வீரர் என்பதோடு மட்டும் இல்லாமல் ஒரு நல்ல குடிமகனாகவும் வாழ்ந்து வருகிறார்.