இந்தியாவின் கடைகோடி தீவையும் விட்டு வைக்காத கொரோனா!!! திடுக்கிடும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா பரவல் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் அந்தமான் பகுதியில் உள்ள ஒரு குட்டித்தீவு மக்களுக்கும் கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்படடு இருக்கிறது. அந்தத் தீவின் மொத்த மக்கள் தொகையே 50 எனக் கூறப்படும் நிலையில் தற்போது அத்தீவில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல குட்டித் தீவுகளும் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் பூர்வீமாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிக்கு சாதாரணமாக வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தீவுக்குள் செல்ல வேண்டுமென்றால் இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும். அப்படி ஸ்டிரிட் எனும் தீவில் பல நூற்றாண்டுகளாக கிரேட்ஸ் எனும் அந்தமான் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் 5 ஆயிரம் எனும் எண்ணிக்கையில் இருந்த இவர்கள் தற்போது 50 பேராக மட்டுமே இருக்கின்றனர் என்று இந்திய அரசாங்கம் தகவல் தெரிவித்து உள்ளது.
ஸ்டிரிட் தீவில் மிகக் குறைந்த அளவில் மக்கள் வசித்து வருவதால் இந்திய அரசாங்கம் சிறப்பு அந்தஸ்து கொடுத்து அத்தீவு மக்களை பாதுகாத்து வருகிறது. இதுபோன்ற அங்குள்ள பல தீவுகளுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன. அதோடு உணவு மற்றும் தங்கும் இடவசதி போன்றவற்றை இலவசமாக இந்திய அரசாங்கமே வழங்கவும் செய்கிறது. மேலும் அங்கு வசிக்கும் சில பழங்குடியின மக்களுக்கு அரசாங்க வேலைகளும் வழங்கப் படுகின்றன. அந்த வகையில் ஸ்டிரிட் தீவில் வசிக்கும் கிரேட்டர் அந்தமான் பழங்குடியின மக்கள் சிலருக்கு போர்ட் பிளேயரில் உள்ள விமான நிலையத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்தில் பணியாற்றிய கிரேட்டர் பழங்குடியினர் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர். இந்நிலையில் ஸ்டிரிட் தீவில் உள்ள மொத்த மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் வெளியுலகத் தொடர்பே முற்றிலும் இல்லாத இந்தியத் தீவு ஒன்றில் கொரோனா பரவியிருப்பதால் தற்போது அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments