நிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…

 

நிவர் புயல் மற்றும் கனமழையால் தமிழகத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் நிவர் புயலின் பாதிப்பை எதிர்க்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது.

இதனால் உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டது. நிவர் புயல் கரையைக் கடந்த பின்பும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் கனமழை ஏற்பட்டது. இந்தப் பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கையும் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிவர் புயலின் தாக்கத்தால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உணவு, நீர் போன்ற அத்யாவசிய பொருட்களை வழங்கி தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன. இப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் எதிர்ப்பாராத விதமாக இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் ரூ.6 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்தும் கொடுக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன் எனத் தெரிவித்தார்.

More News

சென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்!!!

நேற்று விஜயவாடாவில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர் நிறுவனத்தின் விமான ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

தனுஷை 'தலைவா' என அழைத்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை 'தலைவா' என அவரது ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் வழக்கம் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனுஷை

விஜய்யின் 'மாஸ்டர்': மிகப்பெரிய தொகைக்கு ஓடிடியிடம் பேச்சுவார்த்தையா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு கடந்த ஏப்ரல் மாதமே தயாராகி விட்ட போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.

கமல் முன் குவிந்து கிடக்கும் பஞ்சாயத்துக்கள்: சாட்டையை சுழற்றுவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 50 நாட்களுக்கு மேல் ஆன பின்னரும் கமல்ஹாசன் தவறு செய்யும் போட்டியாளர்களை இதுவரை கடுமையாக கண்டிக்கவில்லை என்றும், அவர் அறிவுரை என்ற பெயரில்

சிக்ஸ்பேக் உடல் அமைப்புக்கு மாறிய இன்னொரு பிரபல தமிழ் நடிகர்

கோலிவுட் திரையுலகில் உள்ள இளைய தலைமுறை நடிகர்கள் பலர் சிக்ஸ்பேக் வைத்து அசத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே