கோலிவுட் முதல் பாலிவுட் வரை… வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற 10 சினிமா பிரபலங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல சினிமா பிரபலங்கள் வயது, உடல்நிலை எனப் பல்வேறு காரணங்களுக்காக வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுள்ளனர். வளர்ந்து விட்ட தொழில்நுட்ப காலக்கட்டத்தில் இது சாதாரணமான விஷயமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இது சுவாரசியமானதாகவே பார்க்கப் படுகிறது. அந்த வகையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல தம்பதிகளைப் பற்றிய ஒரு தொகுப்பு.
நடிகர் ஷாருக்கான் – கௌரிகான்
பாலிவுட்டில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் நடிகர் ஷாருக்கான் மற்றும் கௌரிகான் தம்பதியினர் 1991 இல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1997 இல் மகன் ஆர்யன் கான் பிறந்தார். அடுத்து 2000 இல் சுஹானாகான் பிறந்த நிலையில் பின்பு 2013 ஆம் ஆண்டு மீண்டும் வாடகைத்தாய் மூலம் ஆப்ராம்கான் என்ற குழந்தையை வரவேற்றனர். மேலும் குழந்தையை மாத வேறுபாடு இல்லாமல் வளர்ப்பதற்காகவே இந்த பெயரைத் தேர்வு செய்ததாகவும் நடிகர் ஷாருக்கான் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் அமீர்கான் – இயக்குநர் கிரண் ராவ்
பாலிவுட்டில் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்துவரும் நடிகர் அமீர்கான் தனது முதல் மனைவி ரீனாகான் மூலம் இராகான் மற்றும் ஜுனைத் கான் என்று இரு குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து ரீனா கானை விட்டு பிரிந்த நடிகர் அமீர்கான் இயக்குநர் கிராண் ராவை கடந்த 2005 இல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கிரண் ராவ் கர்ப்பமாக இருந்தபோது கருகலைப்பு ஏற்பட்டதாகவும் அதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று வாடகைத்தாய் மூலம் 2011 இல் ஆசாத்ராவ் என்ற குழந்தையைப் பெற்றெடுத்ததைக் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஏன் வருந்தவேண்டும் என்றும் நடிகர் அமீர்கான் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் 2012 இல் இந்தத் தம்பதிகள் விவாகரத்து பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கரண் ஜோஹர்
பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துவரும் கரண் ஜோஹர் வாடகைத்தாய் மூலம் கடந்த 2017 இல் இரட்டைக் குழந்தைகளை வரவேற்றார். இவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒற்றைத் தகப்பன் என்ற அடையாளத்துடன் ‘யாஷ் ஜோஹர்’ என்ற மகனையும் ‘ரூஹி ஜோஹர்’ என்ற மகளையும் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்து வளர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை ஷில்பா ஷெட்டி – ராஜ்குந்த்ரா
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்துவரும் நடிகை ஷில்பா ஷெட்டி ஆட்டோ இம்யூன் எனும் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டு பின்னர் குழந்தையை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதைத் தொடர்ந்து கடந்த 2010 இல் சமிஷா என்ற பெண் குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தாகக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தத் தம்பதிகளுக்கு ஏற்கனவே வியான் ராஜ்குந்தரா என்ற மகன் இருந்த நிலையில் மற்றொரு குழந்தைக்காக இவர்கள் போராடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்து இருந்தனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா- பாடகர் நிக் ஜோனாஸ்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது ஹாலிவுட் சினிமாவில் பிரபலமாகி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னைவிட 10 வயது குறைந்த பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை 2018 இல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தத் தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். அதற்கு மால்தி மேரி சோப்ரா ஜோன்ஸ் என பெயரிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை சன்னிலியோன்- டேனியல் வெபர்
பிரபல மாடலும் பாலிவுட்டில் முக்கிய நடிகையுமாக இருந்துவரும் நடிகை சன்னிலியோன் 2011 இல் டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிகள் கடந்த 2017 இல் மகாராஷ்டிராவிலுள்ள லத்தூரில் இருந்து நிஷா என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். பின்னர் 2018 இல் வாடகைத் தாய் மூலம் ஆஷர் சிங் வெபர் மற்றும் நோவா சிங் வெபர் எனும் இரட்டை குழந்தையைப் பெற்று வளர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரீத்தி ஜிந்தா- ஜுன் குட் இனஃப்
பாலிவுட்டில் நட்சத்திர நடிகையாக வலம்வந்த நடிகை பிரீத்தி ஜிந்தா கடந்த 2016 இல் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்அதிபர் ஜுன் குட் இனஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து 46 வயதான அவர் வாடகைத்தாய் மூலம் கடந்த 2021 இல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களுக்கு ஜெய் ஜிந்தா குட் இனஃப் என்றும் ஜியா ஜிந்தா குட் இனஃப் என்று பெயர் வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் சஞ்சய் தத்- மான்யகா
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்துவரும் நடிகர் சஞ்சய் தத் மற்றும் மான்யகா தம்பதியினர் கடந்த 2010 இல் இக்ரா மற்றும் ஷாஹ்ரான் எனும் இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தனர்.
துஷாரா கபூர் தங்கை ஏக்தா கபூர்
பாலிவுட் சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருந்துவந்த ஜிதேந்திரா மற்றும் ஷோபாவின் மகனாக துஷார் கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். இவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒற்றை தகப்பனாக கடந்த 2016 இல் வாடகைத்தாய் மூலம் லக்ஷ்யா எனும் ஆண் குழந்தையை பெற்றெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
அண்ணனைப் போலவே துஷார் கபூரின் தங்கையும் தொலைக்காட்சி தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக இருந்துவரும் ஏக்தா கபூர் கடந்த 2019 இல் வாடகைத் தாய் மூலம் ரவி எனும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். இவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒற்றைத் தாயாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாய் மூலம் பெற்றோர் ஆகியிருக்கும் தகவலை வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தனது ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன் என்றும் உலக் தெய்விக் என் சிவன் என்றும் பெயர் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com