சீயான் விக்ரமின் '10 எண்றதுக்குள்ள'. ஒரு முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம், சமந்தா நடிப்பில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ''10 எண்றதுக்குள்ள' படம் நாளை உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் முன்னோட்டம் குறித்து தற்போது பார்ப்போம்.
'கோலி சோடா' என்ற சிறிய பட்ஜெட் படத்தை மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக மாற்றி கோலிவுட்டின் பார்வையையே தனது பக்கம் திரும்ப வைத்தவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான விஜய் மில்டன். இதனால் இவருடைய அடுத்த படமான '10 எண்றதுக்குள்ள' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 'ஐ' என்ற மெகா ஹிட்டை கொடுத்த சீயான் விக்ரம் நடித்த அடுத்த படம் என்பதும், இந்த படத்தில் ராசியான நடிகை என்ற பெயர் பெற்ற சமந்தாவும் இணைந்துள்ளார் என்பதும் சாதகமான அம்சங்கள் ஆகும்.
மேலும் 'ஆரண்ய காண்டம்' படத்திற்கு பின்னர் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தொடர்ந்து வெற்றி படங்களில் பணியாற்றி வரும் டி.இமான் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. சென்னையின் அனைத்து எப்.எம்களிலும் ஒலித்து கொண்டிருப்பதே இந்த படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தின் 3 பாடல்களை மதன்கார்க்கியும், இரண்டு பாடல்களை மணி அமுதனும் எழுதியுள்ளனர்.
இந்த படம் ஒரு விறுவிறுப்பான ரோட் ஆக்ஷன் படம் என்பதும், தமிழ் ரசிகர்களுக்கு இந்த படத்தின் கான்செப்ட் மிகவும் புதியது என்ற செய்தியும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படம் வட இந்தியாவின் முக்கிய பகுதிகளிலும், நேபாளம் உள்பட வெளிநாடுகளிலும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றது என்பது சிறப்பம்சம்,
இந்த படத்தின் நாயகி சமந்தாவிற்கு, ஹீரோவுக்கு சமமாக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், முதன்முதலாக அவர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்த படத்தின் விமர்சனத்தை நாளை பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments