close
Choose your channels

விக்ரம், விஜய்சேதுபதி படங்களின் முதல் நாள் வசூல் விபரம்

Friday, October 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம், சமந்தா நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிய '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. குறிப்பாக பி மற்றும் சி செண்டர்களில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில் '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் முதல் நாளில் ரூ.6.5 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ.5 கோடி செய்துள்ளதாகவும், விக்ரம் நடித்த படங்களில் ஷங்கரின் 'ஐ' படத்திற்கு பின்னர் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் முதல் நாளில் ரூ.2.16 கோடி வசூல் செய்துள்ளதாக , விஜய்சேதுபதி நடித்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment