வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் கட்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
- IndiaGlitz, [Thursday,September 21 2017]
சமீபத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் செய்த வேலை நிறுத்ததம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சரியாக இயங்கவில்லை
இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தம் குறித்த வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு ஒன்றில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.