வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.10 கோடி. அதிர்ச்சியில் பான்மசாலா வியாபாரி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜார்கண்ட் மாநிலத்தில் பான்மசாலா வியாபாரி ஒருவரின் வங்கிக்கணக்கில் திடீரென ரு.10 கோடி வந்ததால் வங்கி அதிகாரிகளும், பான்மசாலா வியாபாரியும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பான்மசாலா வியாபாரி பப்புகுமார் திவாரி என்பவர் பேங்க் ஆப் இந்தியாவில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய வங்கிக்கணக்கில் உள்ள ரூ.4500-ல் ரு.1000 எடுக்க வங்கிக்கு சென்றார்.
ஆனால் அவரது வங்கிக்கணக்கை சோதனை செய்த வங்கி அதிகாரி அவருடைய கணக்கில் ரூ.10 கோடி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பப்புகுமார் நீண்டநாள் வாடிக்கையாளர் என்பதால் வங்கி அதிகாரிக்கு அவரையும், அவர் செய்யும் தொழில் குறித்தும் தெரியும்
உங்கள் கணக்கில் எப்படி ரூ.10 கோடி வந்தது என வங்கி அதிகாரி கேட்க பப்புகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வங்கி அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் பப்புகுமாரை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பப்புகுமாரின் சேமிப்புக் கணக்கும் முடக்கப்பட்டது.
இதுகுறித்து பப்புகுமார் கூறுகையில் காலையில் இருந்து இரவு 10 மணி வரை நான் பான் மசாலா விற்பேன். அதில் கிடைத்ததைதான் சேமித்து வருகிறேன். திடீரென என் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அன்றிரவு முழுவதும் நானும் என் குடும்பத்தினரும் தூங்க முடியாமல் தவித்தோம். இந்த பணத்தை என் கணக்கில் போட்டது யார் என்று தெரியவில்லை. உழைக்காமல் வரும் ஒரு பைசா கூட எனக்கு சொந்த மில்லை. கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடவே நான் விரும்புகிறேன்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout