ஒரு நாளைக்கு 10 பிரச்சாரக் கூட்டம்… ரவுண்டி கட்டி கலக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதிலும் அதிமுக முதல்வர் வேட்பாளராக களம் இறங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரே நாளில் 10 க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இதனால் அவரைப் பார்த்து பொதுமக்களுக்கும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொகுதி வாரியாக வேட்பாளர்களுடன் சென்று அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி வருகிறார். இதில் அதிமுக வாக்காளர்களுக்கு மட்டும் அல்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் எடப்பாடி பழனிசாமி வாக்குச் சேகரிக்க துவங்கியுள்ளார்.

கடும் வெளியில் என்று பாராமல் மக்களை நேரில் சந்திப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் தினமும் சுமார் 10 க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டால் மட்டுமே அனைத்துத் தொகுதி மக்களையும் சந்திக்க முடியும் எனும் நிலைமை இருந்து வருகிறது. இதனால் ஒரு பிரச்சாரக் கூட்டத்தையும் தவறவிடாத எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கூட்டங்களில் நேரடியாக மக்களைச் சந்தித்து தனக்கே உரிய பாணியில் வாக்கு சேகரித்து வருகிறார்.

மேலும் அதிமுகவின் இத்தேர்தல் உத்தி மக்கள் இருக்கும் இடத்தை நேடியாகத் தேடி சென்று அதிக கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை பின்பற்றி வருகிறது. இதற்கு மாறாக சில கட்சிகள் பெரிய கூட்டங்களை சேகரித்து மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் எடப்பாடி பழனிசாமி இத்தேர்தல் உத்தியை கடைப்பிடிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நடைபாதை வியாபாரிகள் முதல்… அதிமுக தேர்தல் அறிக்கையை பாராட்டி வருவதாகக் கருத்து!

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல இசையமைப்பாளர்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் சுமார் 1000 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டனர்

சர்வதேச வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்ற திருச்சி பெண்... குவியும் பாராட்டு!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15 ஆம் தேதி முதல் தேசிய தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஹெலிகாப்டர் ஷாட் மன்னனையே… ஆட்டம் காண வைத்த இளம் வீரர்?  வைரல் வீடியோ!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சிஎஸ்கே பிளே ஆப் நிலைக்குக் கூட தகுதிப் பெறவில்லை.

பெண் கொடுத்த புகாரால் சர்ச்சையில் சிக்கிய பாக். நட்சத்திர கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வரும் பாபர் ஆசம் மீது பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.