அரசு இதழில் இடம்பெற்ற 10.5% உள் இடஒதுக்கீடு செய்தி… முதல்வருக்கு குவியும் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
வன்னியர்கள் 40 ஆண்டு காலமாக இடஒதுக்கீட்டு முறையில் உள் இடஒதுக்கீட்டு அம்சத்தை கோரி வருகின்றனர். இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கான முடிவெடுக்கப்படும் எனக் கூறி இருந்தார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒரு குழுவையும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஏற்படுத்தினார். இந்தக் குழு சமர்ப்பிக்கு எண்ணிக்கை அடிப்படையில் உள் இடஒதுக்கீடு முறைக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தமிழக முதல்வர் அளித்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை ஒட்டி வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டில் 10.5% ஒதுக்கீடு செய்து தமிழகச் சட்டப்பேரவையில் அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தற்போது தமிழக அரசிதழில் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த இடஒதுக்கீடு படி யார் யாரெல்லாம் பயனடைவர் என்ற தகவலையும் அரசிதழ் வெளியிட்டு உள்ளது.
மேலும் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வரும் ஆய்வுக்குழு இதற்கான அறிக்கையை அடுத்த 6 மாதத்திற்குள் வெயிடும்போது இதற்கான நிரந்தர அரசாணை மீண்டும் தமிழசச் சட்டச்சபையில் கொண்டு வரப்படும் என்ற உத்தரவாதத்தையும் தமிழக முதல்வர் அளித்து உள்ளார் . இந்த அறிவிப்பை ஒட்டி வன்னியர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments