அதிக விஷமுடைய கட்டுவீரியன் பாம்பு குட்டியை விழுங்கிய குழந்தை!!! பரபரப்பு சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒருவயது குழந்தை ஒன்று அதிக விஷமுடைய கட்டுவீரியன் பாம்பு குட்டியை விழுங்கியச் சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பதேஷ்கஞ்ச் அடுத்த போகாப்பூர் பகுதியில் ஒரு வயது குழந்தை வாயில் வைத்து எதையோ விழுங்குவதை அக்குழந்தையின் தாய் பாத்திருக்கிறார். ஆனால் அவள் பார்க்கும்போதே முக்கால் வாசி குழந்தையின் தொண்டைக்குள் போய்விட்டதாகவும் இதனால் பதட்டமடைந்த அந்தபெண் உடனே அதைப்பிடித்து இழுத்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
பிடித்து இழுக்கும்போதுதான் தெரிந்திருக்கிறது அது இறந்துபோன கட்டுவீரியன் பாம்பு என்று. உடனே அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றிருக்கிறார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக விஷமுறிவு ஊசியைச் செலுத்தி குழந்தையைக் காப்பாற்றி இருக்கின்றனர்.
குழந்தை விழுங்கிய கட்டுவீரியன் பாம்பு ஆறு அங்குலம் இருந்ததாகவும் குழந்தை உண்ணும்போதே அது இறந்து இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். கட்டுவீரியன் அதிக விஷம் கொண்டது என்பதால் விஷமுறிவு மருந்து செலுத்தி குழந்தை காப்பாற்றப் பட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். ஆனால் பாம்பை விழுங்கும்போதே அக்குழந்தையின் தாய் பார்த்ததால் தற்போது குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது. இல்லையென்றால் என்னவென்று தெரியாமல் நேரம் வீணாகி இருக்கும் எனவும் மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout