கோவிட் -ஆல் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம்...! வடமாநில அரசு அறிவிப்பு...!
- IndiaGlitz, [Friday,May 21 2021]
கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டத்திலும், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையத் துவங்கினாலும், தினசரி பாதிப்பு என்பது 2.5 லட்சத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாகஅறிவித்துள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினருக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்,
இலவசக் கல்வி, இலவச ரேஷன் பொருட்கள், வட்டியில்லா கடன் உள்ளிட்டவை வழங்கப்படும் போன்றவற்றை கொரோனா முதல் அலையின் போது அறிவித்திருந்தார்.
அதேபோல் அரசு வேலையில் பணிபுரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையுடன், ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3500 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.