துக்க வீட்டிற்கும் ஆணுறை எடுத்துச் செல்லும் இளைஞர்கள்? என்ன காரணம் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் முன்னணி ஆணுறை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இளைஞர்கள் இறப்பு வீட்டிற்குச் செல்லும்போதும் பாதுகாப்புக்காக ஆணுறை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஆணுறை பாதுகாப்பு குறித்து அமெரிக்காவில் உள்ள முன்னணி காண்டம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் 18-35 வயதுடைய 2,000 இளைஞர்களிடம் ஆன்லைன் வாயிலாக கருத்துக்கணிப்பு கேட்கப்பட்ட நிலையில் அதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆணுறை குறித்து விழிப்புடன் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் கலந்துகொண்ட 8 ஆண்களில் ஒரு நபர் துக்க வீட்டிற்கு சென்றாலும் மறக்காமல் ஆணுறை கொண்டுசெல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து பேசிய இளைஞர்கள் துக்கத்தில் இருந்து மீள்வதற்கு செக்ஸ் ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்றும் உடலுறவின்போது மகிழ்ச்சியான ஹார்மோன் எண்டோர்பின்கள் வெளிப்படுவதால் கவனச்சிறதல் ஏற்பட்டு துன்பமான சூழலில் இருந்து விடுபட முடியும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் ஆணுறை குறித்து பல்வேறு கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதில் 65% இளைஞர்கள் தங்களது முதல் உடலுறவுக்காக ஆணுறையைக் கொண்டு செல்வதாகவும் 63% பேர் தங்களது துணையிடம் பாதுகாப்பு குறித்து கருத்து கேட்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இதில் 77% இளைஞர்கள் உடலுறவு பாதுகாப்பு குறித்து ஆண், பெண் இருவருமே சமமான பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தினை கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதில் 78% பெரியவர்கள் உடலுறவின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக பெண்களுக்கு அழுத்தம் கொடுக்காமல், தானே அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் 52% பெண்கள் உடலுறவுக்காக மாத்திரை எடுத்துக்கொள்வதற்கு விரும்பவில்லை என்பதும் ஆண்கள் பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதைவிட 52% ஆண்கள் தங்களது படுக்கை அறையில் எப்போதும் ஆணுறை வைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர் என்பதும் 57% பெண்களும் இதேபோல படுக்கை அறையில் ஆணுறையை வைத்திருப்பதாகவும் முடிவுகள் கூறப்பட்டுள்ளன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆய்வில் கலந்துகொண்ட 52 சதவீதம் ஆண்கள் தங்களது பணப்பை (பர்ஸ்) லேயே எப்போதும் ஆணுறையை வைத்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com