திருச்சி எம்.எல்.ஏ காரில் 1 கோடி பறிமுதல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருச்சியில், முசிறி எம்எல்ஏ காரில் ஒரு கோடி ரூபாயை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது தெரிந்த ஒன்றே. அதன்படி இருபதாயிரத்திற்கும் அதிகமான தொகையை ரொக்கமாக எடுத்துச்செல்லக்கூடாது என்ற விதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும், பறக்கும் படை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள், கடந்த செவ்வாயன்று சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முசிறி தொகுதி அதிமுக எம்எல்ஏ செல்வராஜ் காரை, இரவு 10 மணியளவில் பெட்டை வாய்தலைப் பகுதியில் மறித்து, சோதனையிட்டனர். அதில் கட்டுக்கட்டாய் இருந்த ஒரு கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இப்பணத்தை ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com