திருச்சி எம்.எல்.ஏ காரில் 1 கோடி பறிமுதல்..!

  • IndiaGlitz, [Wednesday,March 24 2021]

திருச்சியில், முசிறி எம்எல்ஏ காரில் ஒரு கோடி ரூபாயை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது தெரிந்த ஒன்றே. அதன்படி இருபதாயிரத்திற்கும் அதிகமான தொகையை ரொக்கமாக எடுத்துச்செல்லக்கூடாது என்ற விதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும், பறக்கும் படை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள், கடந்த செவ்வாயன்று சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முசிறி தொகுதி அதிமுக எம்எல்ஏ செல்வராஜ் காரை, இரவு 10 மணியளவில் பெட்டை வாய்தலைப் பகுதியில் மறித்து, சோதனையிட்டனர். அதில் கட்டுக்கட்டாய் இருந்த ஒரு கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இப்பணத்தை ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'தளபதி 65' படத்தின் சூப்பர் அப்டேட்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள 'தளபதி 65' திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

பெண் எம்எல்ஏ வேட்பாளருக்கு ஆபாச வீடியோ மிரட்டல்… சைபர் கிரைம் விசாரணை!

சென்னை பல்லாவரம் தொகுதியில் மை இந்தியா கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் வீரலட்சுமி (35). இவர் கடந்த 17 ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்

அமீர்கானுக்கு கொரோனா பாதிப்பு: உடன் நடித்த நாயகிக்கும் பாசிட்டிவ்!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் நடித்த பிரபல நடிகை ஒருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட்

மோடியா? இந்த தாடியா? மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் நடிகர் கமல்ஹாசன்!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி 5 முனை போட்டி நிலவுகிறது.

மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு… ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சில புதிய விதி!

நாடாளுமன்றத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்பு New wage code Bill எனும் புதிய சட்டம் இயற்றப்பட்டது.