4 மண்டலங்களில் 1000க்கும் மேல், 2000ஐ நெருங்கும் ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சற்று முன் சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. இதில் ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய நான்கு மண்டலங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது

ராயபுரத்தில் 1768 பேர்களும் கோடம்பாக்கத்தில் 1300 பேர்களும் திருவிக நகர் 1079 பேர்களும் தேனாம்பேட்டையில் 1000 பேர்களும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தண்டையார்பேட்டையில் 881 பேர்களும், அண்ணாநகரில் 783 பேர்களும் வளசரவாக்கத்தில் 650 பேர்களும் அடையாறு பகுதியில் 513 பேர்களும், அம்பத்தூரில் 402 பேர்களும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருவதால் தமிழகத்தின் பிற பகுதிகளில் அறிவிக்கப்படும் தளர்வுகள் சென்னையில் மட்டும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது