யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண்: அமெரிக்காவில் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
வீடியோ இணையதளங்களில் உலகின் நம்பர் ஒன் ஆக இருக்கும் யூடியூப் இணையதளத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று மர்மபெண் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக மூன்று பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியில் யூடியூப் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று திடீரென ஒரு பெண் கண்மூடித்தனமாக துப்பாகியால் சுட்டுவிட்டு பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலையும் செய்து கொண்டார். இந்த பெண், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவரின் தோழிதான் இவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இவர் ஏதேனும் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சான்பிராசிஸ்கோ மருத்துவமனை தலைவர் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் தலைஅமை அலுவலகத்தில் சுமார் 1700 பேர் பண்புரிகின்றனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து யூ ட்யூப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தபோது, 'துப்பாக்கி சூடு குறித்த தகவல் தெரிந்தவுடன், துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு நன்றி என்றும், இந்த சம்பவத்தால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பதட்டத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com