டாஸ்மாக் கடையை திறக்க பெண்கள் போராட்டம்: தமிழகத்தில் ஒரு விசித்திரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் அருகே பெண்கள் கூட்டம் ஒன்று மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று விசித்திரமான போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது சாலாமேடு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பெண்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக ஒரு வழியாக அந்த குறிப்பிட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள ஆண்கள் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று சரக்குகளை வாங்கி குடித்துள்ளனர். இதனால் தங்கள் கணவர்கள் கஷ்டப்படுவது மட்டுமின்றி குடித்டுவிட்டு எங்கே விழுந்தார்கள் என்று கண்டுபிடிப்பதும் சிரமமாக இருப்பதாக அந்த பகுதி பெண்கள் கருதினர். பக்கத்தில் டாஸ்மாக் கடை இருந்தபோது மட்டையான கணவர்களை எளிதில் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையில் தற்போது அவர்களை தேடுவதே ஒரு பெரிய வேலையாகிவிட்டது.
இதனால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று நேற்று பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர். இதனையறிந்து கடையை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்திய பெண்கள் திரண்டு கடையை திறக்க கூடாது என்று கோஷமிட, இரண்டு பெண்கள் கோஷ்டிகளுக்கு இடையில் செய்வதறியாது போலீசார் திகைத்து நின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments