போக்சோ சட்டத்தில் இளம்பெண் கைது? அதிர்ச்சி தரும் பின்னணி!
- IndiaGlitz, [Monday,June 28 2021]
மைனர் சிறுவனோடு தவறான உறவில் ஈடுபட்டதாக குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது.
சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொடர்பான வழக்குகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி கைது செய்யப்படும் குற்றவாளிகள் பெரும்பாலும் ஆண்களாகவே உள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த கோக்ரா எனும் பகுதியில் 20 வயதே ஆன சோனால் பாட்டில் எனும் பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
திருமணமாகி 3 குழந்தைகளைக் கொண்ட சோனால் தனது திருமண வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் ஏற்பட்டதை அடுத்து 17 வயதே ஆன சிறுவர் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இந்நிலையில் சிறுவனைத் தேடிய அவனது பெற்றோர் இது கடத்தல் என புகார் அளித்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த சோனால் நாங்கள் விரும்பிதான் ஊரை விட்டு ஓடிவிட்டோம். மேலும் இருவரும் உடலுறவு கொண்டோம் என போலீஸிடம் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை தொடர்ந்து மைனர் சிறுவனுடன் உடலுறவு கொண்ட சோனாலை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் இதேபோன்று 17 வயதான சிறுவனை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குஜராத் மாநிலத்தில் 23 வயதே ஆன இளம்பெண் போக்சோ கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.