அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பொக்ரான் அணுகுண்டு சோதனை மூலம் உலகையே திரும்பி பார்க்க செய்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இந்தியில் தயாராகவுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் தயாராக முயற்சிகள் நடந்து வருகிறது. அப்துல்கலாம் வேடத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அபிஷேக் அகர்வால் மற்றும் அனில் சுங்காரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தின் இயக்குனர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், ராஜ் செங்கப்பா என்பவர் இந்த படத்தின் ஸ்கிரிப்டை எழுதி வருவதாக கூறப்படுகிறது. இவர் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடைபெற்ற சம்பவத்தின் ரகசியங்கள் குறித்து Weapons of Peace என்ற புத்தகத்தை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com