கிலோ மீட்டர் கணக்கில் வலை பின்னிய சிலந்தி பூச்சிகள்…. வியப்பில் ஆழ்த்தும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கிப்ஸ்லாந்து பகுதியிலும் கனமழை பெய்துள்ளது. இந்த மழைக்கு நடுவே அந்த மாகாணத்தின் சில இடங்களில் கிலோ மீட்டர் கணக்கில் சிலந்திகள் வலைப்பின்னி வைத்து இருக்கும் காட்சி பார்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
பொதுவா சிலந்திகள் சில மீட்டர் தூரம் வரை வலை பின்னுவதைப் பார்த்து இருப்போம். ஆனால் கிப்ஸ்லாந்தில் தற்போது சிலந்திகள் கிலோ மீட்டர் கணக்கில் வலை பின்னி வைத்திருக்கிறது. அதோடு மரம், செடி, கொடி, புல்வெளி, மின்கம்பம் என்று எதையும் விட்டு வைக்காமல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளை போர்வை போர்த்தியது போல சிலந்திகள் வலை பின்னி வைத்து இருக்கிறது.
இந்தக் காட்சிகளைப் பார்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தற்போது ஆச்சர்யத்தையும் அச்சத்தையும் வெளிப்படுத்த துவங்கி உள்ளனர். இதனால் நிபுணர்கள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வகை சிலந்திகளால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் மழை, வெள்ளத்தில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத்தான் சிலந்திகள் இப்படி வலை பின்னி வைத்து இருக்கிறது எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.
எனினும் கிலோ மீட்டர் கணக்கில் சிலந்திகள் வலை பின்னி வைத்து இருக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் இதனால் சிலந்தி வலை பற்றிய புகைப்படங்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் கடும் வைராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout