ரஜினியை அடிக்கும் காட்சியா? படத்தில் இருந்து வெளியேறிய பிரபல ஹீரோ!

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினியை அடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த படத்தில் இருந்து விலகியதாக பிரபல ஹீரோ ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ’முத்து’. கடந்த 1995ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியின் நண்பராக சரத்பாபு நடித்த கேரக்டரில் நடிக்க முதலில் படக்குழுவினர் நடிகர் ஜெயராமை அணுகியதாகவும், இந்த படம் ’தேன்மாவின் கொம்பத்து’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக் என்பதால் இந்த படத்தில் நடிக்க முதலில் ஜெயராம் சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.

ஆனால் இந்த படத்தில் ரஜினி கேரக்டரை கன்னத்தில் அறையும் ஒரு காட்சி இருப்பதை அறிந்ததும் இந்த படத்தில் தான் நடிக்க விரும்பவில்லை என ஜெயராம் விலகிவிட்டதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியை அப்போது தனக்கு அதிகமாக தெரியாது என்றும் அவரை அடிக்கும் கேரக்டரில் நடித்தால் அவரது ரசிகர்கள் தன்மீது கோபப்படுவார்கள் என்ற காரணத்தினால்தான் அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் ஜெயராமின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.