இந்த வாரம் எவிக்சன் யார்? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Saturday,October 24 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எவிக்சன் பட்டியலில் ஆஜித், சுரேஷ், அனிதா, பாலாஜி மற்றும் ஆரி ஆகிய ஐவர் உள்ளனர். இதில் குறைவான வாக்குகள் பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்

இந்த நிலையில் சற்றுமுன் வந்த நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி இந்த வாரம் ஆஜித் தான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் அவரிடம் எவிக்சன் பாஸ் இருப்பதால் அவர் அந்த பாஸை பயன்படுத்தி தன்னை எவிக்சனில் இருந்து காப்பாற்றி கொள்கிறார். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எவிக்சன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

எவிக்சன் பாஸை ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் ஆஜித் அதனை பயன்படுத்திவிட்டதால் இனி எவிக்சன் பாஸ் செல்லாது. அடுத்த வாரமும் ஆஜித் குறைந்த வாக்குகள் பெற்றால் வெளியேற வேண்டும் நிலை ஏற்படும் என்பதை புரிந்து கொண்டு அவர் இனிமேல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது