மக்களவை தேர்தலில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்...இதன் பிண்ணனி என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிலதிபர் அமர்தீப்ரானெளட் மற்றும் ஆசிரியர் ஆஷா ரானெளட் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.2004 ஆம் ஆண்டு திரையுலகில் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து, ஹிந்தி திரைப்பட நடிகையாகவும்,மாடல் அழகியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட வலிமைப் பெண் கங்கனா ரனாவத் பற்றி காண்போம்.
கேங்ஸ்டர் என்னும் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமாகி,இந்த படத்திற்காக 2006 ஆம் ஆண்டு பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.பிறகு தமிழில் தாம் தூம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களைப் பெற்றார்.2019இல் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் சுயசரிதையை மையப்படுத்தி இயக்குநர் விஜய் இயக்கிய தலைவி என்னும் படத்தில் தன்னுடைய ஒட்டு மொத்த நடிப்பு திறமையை காட்டி அனைவரின் மத்தியிலும் தைரியப் பெண்ணாக காட்சியளித்தார்.
மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு தேசிய அளவில் மிக சிறந்த நடிகைக்கான பட்டம் வென்றார்.தற்போதும் ஹிந்தி திரைப்பட உலகில் முண்ணனி கதாநாயகியாக வலம் வருகிறார்.
2020 ஆம் ஆண்டில் ரனாவத் தனக்கென்று ஒரு மணிகர்னிகா பிலிம்ஸ் என்னும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.அதன் கீழ் அவரே இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.மேலும் சிறந்த உடை அணிந்த பிரபலங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.வெளிப்படையாகப் பேசும் தன்மை கொண்டவர்.
வலதுசாரி சித்தாந்தங்களுடன் இணைந்து,பாரதிய ஜனதா கட்சியை (BJP) ஆதரித்து,அவரது தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக ஏற்படும் மோதலுக்கு குரல் எழுப்பியுள்ளார்.வரவிருக்கும் 2024 இந்திய பொது தேர்தலுக்கான வேட்பாளராக பிஜேபியால் அவர் பெயரிடப்பட்டுள்ளார்.
பிறகு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறப்பின் போது அவருக்காக தனி ஒருத்தியாக யாரையும் எதிர்பார்க்காமல் குரல் கொடுத்தார்.ஆண் பெண் இருபாலரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என்ற மனப்பான்மை உடையவர்.மிக சிறுவயதில் இருந்தே தனித்தன்மையோடு காட்சி அளிக்க வேண்டும் என்று நினைத்த இவர் ,நடிப்பின் நுணுக்கங்களை ஆர்வத்தோடு கற்றுத் தேர்ந்தார்.தத்ரூபமாக நடித்து ரசிகர் பட்டாளத்தை பிடித்த பெண்மணி ஆவார்.
ஒரு நாடகத்தில் ஆண் கதாப்பாத்திரமாக அன்றைய சூழ்நிலைக்கு நடித்த ரனாவத்,பார்வையாளர்களால் அதிகமாக ஈர்க்கப்பட்டு வெகுவான கரகோஷத்தை பெற்றவர். நெப்போட்டிஷம் என்னும் வார்த்தையை அறவே வெறுப்பவர்.அதன் மூலம் வரும் வாய்ப்பையும் ஏற்காதவர்.
இன்றும் காவியத் தலைவியாக தைரியப் பெண்ணாக அன்போடு அழைக்கப்படும் கங்கனா ரனாவத் தற்போது அரசியலில் கால் பதிக்க இருக்கிறார். நிஜத்தில் ராணியாக தோற்றமளிக்கும் கங்கனா மக்களவை தேர்தலில் அவரது சேவையை ஆவலோடு எதிர்பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout