மாலை 5 மணிக்கு “அன்பின் ஒலி“ எழுப்புங்கள்; தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, (மார்ச் 22) இன்று ஒருநாள் மட்டும் 14 மணிநேரம் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாநில அரசும் தங்களது மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், கொரோனாவுக்கு எதிராக கடுமையாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சித் துறை போன்ற அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் கரவொலி எழுப்புமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதற்காக, இன்று மாலை சரியாக 5 மணிக்கு ஒவ்வொரு பகுதியிலும் காவல் துறையினர் தங்களது வாகனங்களில் வந்து சைரனை எழுப்புவர். அப்போது கொரோனாவிற்கு எதிராக பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் கரவொலியை எழுப்பி நன்றியை செலுத்த வேண்டும்.
தற்போது, மாலை 5 மணிக்கு எழுப்ப இருக்கும் கரவொலியை “அன்பின் ஒலி“ என்ற பெயரில் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவில் “கொரோனாவை அழிக்கும் அறப்போராட்டத்தை அனைவரும் ஆதரிப்போம்“ எனத் தமிழக அரசு குறிப்பிட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com