என் வலியை விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம்: பெருந்தன்மையுடன் கூறிய விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் நேற்று வெளியானது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் பைனான்ஸ் மூலம் வாங்கிய ரூ.1.5 கோடிக்கு விஷால் பொறுப்பேற்றுக்கொண்டதால் அந்த பணத்தை விஷால் கேட்டதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை '96' படத்தின் ரிலீஸ் தேதிக்கு முந்தைய நாள் விடிய விடிய நடந்தும் முடிவு எட்டாததால் அதிகாலை காட்சி ரத்தானது. இந்த நிலையில் பிரச்சனையை சுமூகமாக முடிக்க முன்வந்த விஜய்சேதுபதி, நந்ததகோபால் தரவேண்டிய ரூ.1.5 கோடிக்கு தான் பொறுப்பேற்று கொள்வதாக கூறியதை அடுத்து 8 மணி முதல் காட்சிகள் தொடங்கியது.
இந்த நிலையில் அந்த ரூ.1.5 கோடியை தானே பொறுப்பேற்று கொள்வதாகவும் தனது வலியை விஜய்சேதுபதி சுமப்பதை தான் விரும்பவில்லை என்றும் விஷால் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷால் தரப்பினர் கூறியதாவது:
திரு. விஷால் அவர்கள் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை தர வேண்டாம். அதுக்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார். திரு.நந்தகோபால் அவருக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷால் அவர்கள் , திரு.நந்தகோபால் அவரிடமே பெற்றுக்கொள்கிறார். அதுவரைக்கும் அந்த தொகைக்கு விஷால் அவர்கள் வட்டியும் கட்டுவார். ஆகவே, பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை திரு. விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் அவர்கள் நினைக்கிறார். மேலும், இந்த பிரச்சினையிலிருந்து விஜய்சேதுபதி அவர்கள் எந்த வலியும் இல்லாமல் வெளியே வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
விஷாலின் இந்த பெருந்தன்மையான முடிவை கோலிவுட் திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout