கோலி- ஸ்ருதிஹாசன் வரை கறுப்புத் தண்ணீரை விரும்பி குடிக்கும் பிரபலங்கள்… என்ன ஸ்பெஷல்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபகாலமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் தாங்கள் அன்றாடம் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக Black Water எனப்படும் கறுப்புத் தண்ணீரை அதிகம் விரும்பிக் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி உள்ளனர். இந்தத் தண்ணீரின் விலை கிட்டத்தட்ட ரூ.3,000 – 4,000 வரை விற்கப்படுகிறது.
இத்தனை விலையுயர்ந்த தண்ணீரை பிரபலங்கள் ஏன் விரும்புகின்றனர். அதோடு அந்தத் தண்ணீரில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதுபோன்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து விட்டது. சமீபத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் மலைக்கா அரோரா ஜிம்மில் இருந்து திரும்பும்போது கையில் இந்த கறுப்பு தண்ணீர் கொண்ட வாட்டர் பாட்டிலை கையில் வைத்திருந்தார்.
நம்முடைய உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் இந்த கறுப்பு தண்ணீரை அருந்திவிட்டு உற்சாகமாக உணருவதாகவும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அதோடு இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சமீபகாலமாக கறுப்புத் தண்ணீரை குடிப்பதை வழக்கமாக்கி உள்ளாராம். இதனால் கறுப்புத் தண்ணீரின் ரகசியத்தை அவசியம் தெரிந்து கொள்வோம்.
கறுப்புத் தண்ணீர் குறித்து பாட்டியா மருத்துவமனை உணவியல் துறை தலைவர் டாக்டர் பூஜா தாக்கர், இந்தத் தண்ணீரில் அதிகளவு ஃபுல்விக் அமிலம் (FVA) மற்றும் ஒருசில கனிமங்கள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன. மேலும் உடலில் அதிக நீரேற்றத்துடன் pH அளவை சமப்படுத்தவும் அமிலத்தன்மையைச் சமநிலைப்படுத்தவும் இந்தத் தண்ணீர் உதவுகிறது. இதனால் கறுப்புத் தண்ணீர் ஃபுல்விக் பானம் மற்றும் எனர்ஜி பானம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது எனக் கூறியிருந்தார்.
சாதாரணமாக நாம் அருந்தும் தண்ணீரில் குளோரின் மற்றும் சுண்ணாம்புத் தன்மை 6.5-7.5 pH அளவு இருக்கும். ஆனால் கறுப்புத் தண்ணீன் pH அளவு 7.5ஆக இருக்கிறது. மேலும் இது இயற்கையான ஆக்ஸினேற்த்தை கொண்டிருக்கிறது. அதனால் உடலில் இருந்து அதிகப்படியான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
உடலில் நீரேற்றத்தை சமநிலைப்படுத்துவதோடு அதிக pH அளவு, காரத்தன்மை மற்றும் சாதாரணத் தண்ணீரைவிட குறைவான அமிலத்தன்மை கொண்டிருப்பது கறுப்புத் தண்ணீரின் ஸ்பெஷல். இதனால் குடல் நலம் மேம்படுகிறது. அதோடு அக்ஸினேற்றம் சரிவர நடப்பதால் வீக்கம் இல்லாமல் உடல்நலம் மேம்படுகிறதாம். அதோடு அல்சைமர் போன்ற நோய்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தி உருவாகிறது. இதைவிட முக்கியமாக சருமத்திற்கு ஆரோக்கியம் தருகிறதாம்.
கறுப்புத் தண்ணீரின் இந்த அம்சங்களைப் பார்க்கும்போது நமக்கே ஒரு ஆவல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதன் விலை ரூ.3,000-4,000 என்பதுதான் மலைக்க வைக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments