CWC அஸ்வின் கைதாகப்போகிறாரா....? உணர்ச்சியில் அவரே ஷேர் செய்த பதிவு.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அஸ்வின். குறிப்பாக இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு லட்சக்கணக்கான பெண் ரசிகைகள் உருவானார்கள். இதற்கு முன் ஒரு சில குறும்படங்களில் கதாநாயகனாகவும், சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான "முணு முணுக்கிற முத்தம்மா மற்றும் அடிப்பொலி" என்ற 2 ஆல்பம் பாடல்களும், யுடியூப் தளத்தையே ஆட்சி செய்தது. பல மில்லியன் பார்வையாளர்களை கடந்த இக்காணொளிகள் இணையத்தில் ட்ரெண்டானது. தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற தமிழ் திரைப்படத்திலும், 'மீட் க்யூட்' என்ற தெலுங்கு ஆந்தாலாஜி-யிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அஸ்வின் குறித்த மீம் ஒன்று இணையத்தில் வைரலாக, அவரே தனது ஸ்டோரியில் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார். "பல பெண்களின் இதயத்தை திருடிய குற்றத்திற்காக அஸ்வின் போலீசால் கைது செய்யப்படுகிறார்" என்ற மீமை பகிர்ந்துள்ள அவர், இதை பார்த்தவுடன் ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com