அஜித் படத்தை பாராட்டிய விஜய் பட வில்லன்

  • IndiaGlitz, [Saturday,June 09 2018]

அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விவேகம். அஜித் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட இந்த படம் சமீபத்தில் 'வீர்' என்ற பெயரில் இந்தியில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 'வீர்' படத்தை பார்த்த பிரபல வில்லன் நடிகர் அபிமன்யூசிங், படத்தையும் அஜித் நடிப்பையும் இயக்குனரின் பணியையும் பாராட்டியுள்ளார். தனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் என்றும், அவருடைய அனைத்து படங்களையும் பார்த்து ரசிப்பதாகவும் கூறிய அபிமன்யூசிங், 'வீர்' படம் சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பாக அஜித் நடிப்பும் ஆக்சன் காட்சிகளும் சூப்பர் என்று கூறி பாராட்டியுள்ளார். அஜித்தின் நடிப்பும் அவர் காட்டிய முகபாவங்களையும் பார்க்கும்போது அவர் ஒரு புலி மாதிரி இந்த படத்தில் இருந்தார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அபிமன்யூசிங், விஜய் நடித்த 'வேலாயுதம், விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள', கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' டிராக் லிஸ்ட் வெளியீடு

விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள 'ஜூங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார்?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. தொலைக்காட்சி சீரியலுக்கு அடிமையாகி இருந்தவர்கள்

'விஜய் 62' படத்தில் 'விக்ரம் வேதா' நடிகர்

விஜய் நடித்து வரும் 'விஜய் 62' திரைப்படத்தின் படப்பிடிப்பை ஏ.ஆர்.முருகதாஸ் விறுவிறுப்புடன் நடத்தி வருகிறார். தற்போது சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் அரசியல் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

'கோலி சோடா'வுக்காக கொடி பிடித்த சூர்யா

இயக்குனர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ள 'கோலி சோடா 2' படம் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் காலா செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனம் மற்றும் பெருவாரியான வசூலை பெற்று கொண்டிருக்கின்றது.