விடுதலை படத்தில் நடித்த தமிழரசியா இவர்? ஆச்சர்யப்படுத்திய நடிகை பவானி ஸ்ரீ புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘விடுதலை’. இந்தத் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையிட்ட நடிகை பவானி ஸ்ரீ-யின் புதிய போட்டோஷுட் புகைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் ஆச்சர்யத்தை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியாகிய விடுதலை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை பவானி ஸ்ரீ. அச்சு அசலாக ஒரு கிராமத்துப் பெண்ணாகவே நடித்திருந்த அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் ரசிகர்களிடையே பிரபலமான பவானி ஸ்ரீ குறித்த விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இயங்கிவரும் நடிகை பாவானி ஸ்ரீ தற்போது புதிய போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் படு மார்டனாக காட்சித்தரும் அவரைப் பார்த்த ரசிகர்கள் படத்தில் கிராமத்து பெண்ணாக இருந்தீர்களே? என ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.
மாடலிங் துறையில் கவனம் செலுத்திவந்த நடிகை பவானி ஸ்ரீ ஏற்கனவே தெலுங்கு வெப் சீரிஸ்களில் நடித்து பிரபலமான நிலையில் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கூடவே இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரும் நடிகருமாக இருந்துவரும் ஜி.வி.பிரகாஷின் தங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி சினிமா பின்னணியில் இருந்து வந்த நடிகை பவானி ஸ்ரீ, வெளிநாட்டில் நடிப்பு சம்பந்தமான படிப்பை முடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தவிர இவர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்திலும் பாவக்கதைகள் ஆந்தலாஜி வகை திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பதும் தற்போது கவனம் பெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com