சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் காலமானார்

  • IndiaGlitz, [Friday,December 21 2018]

பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். அவருக்கு வயது 73. புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். இவர் 1995-ம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாவல்கள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல எழுதிய எழுத்தாளர் பிரபஞ்சன் வானம் வசப்படும்' என்ற வரலாற்றுப் புதினம் எழுதியற்காக கடந்த 1995-ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றார். புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது உள்பட பல விருதுகளை பெற்ற பிரபஞ்சன் இதுவரை 86 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

குமுதம், விகடன், குங்குமம் உள்பட போன்ற பத்திரிகைகளில் பிரபஞ்சன் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய 'மகாநதி', 'மானுடன் வெல்லும்', 'சந்தியா', 'காகித மனிதர்கள்', 'பெண்மை வெல்க', போன்ற நாவல்கள் பெரும் புகழ் பெற்றவை.