பதுங்கி பாய்வாரா சசிகலா? அரசியல் விலகலைக் குறித்து வைரலாகும் பிரத்யேக பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை சென்று மீண்டவர் திருமதி சசிகலா. இந்த 4 வருடங்களில் அவருடைய அரசியல் வாழ்க்கை பல்வேறு திருப்பங்களை சந்தித்து கடைசியில் தற்போது அரசியலில் இருந்து விலகுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பு பல்வேறு தரப்புகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும்போது அவருக்கு அமமுக தொண்டர்களால் கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்க்கும்போது அரசியலில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்றும் இவரால் அதிமுகவிற்குள் பல்வேறு சர்ச்சைகள் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் பல கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
ஆனால் இத்தனை எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் திருமதி சசிகலா கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் விலகுவதற்கான அழுத்தங்கள் இருந்ததா? என்ற பெரிய கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர் வரதாஜன் அவர்கள் நமக்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார்.
இந்தப் பேட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கும் இதேபோல அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே இது ராஜதந்திரமாகக் கூட இருக்கலாம். எனவே சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை பொறுத்தவரை அதற்கான ஏற்றச் சூழலுக்காக அவர் காத்திருக்கலாம். அல்லது பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்திற்கான சூழலை எதிர் நோக்கி இருக்கலாம்.
மேலும் சசிகலா என்ற ஆளுமை அரசியலில் எந்த அளவிற்கு பொருத்தமானவர்? அல்லது அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? தற்போதைய தமிழக அரசியலில் நிலவும் சிக்கலுக்கு இடையே சசிகலாவால் என்ன செய்ய முடியும்? என்பது போன்ற பல்வேறு ஆழமான கேள்விகளுக்கு வரதராஜன் அவர்கள் பதில் அளித்து உள்ளார். தமிழக அரசியலில் ஒரு பெண் ஆளுமையாக இருப்பார் எனக் கருதப்பட்ட சசிகலாவின் அரசியல் விலகலை குறித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout