சிம்புவுக்கு ஆதரவு கொடுக்கும் அஜித் இயக்குனர்.
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் இயக்குனர் ஆதிக் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு சிம்பு பதிலளித்த போதிலும் சிம்புவின் மீதான குற்றச்சாட்டு இன்னும் சமூக வலைத்தளங்களில் ஒரு விவாத பொருளாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அஜித் நடித்த 'முகவரி' படத்தை இயக்கிய இயக்குனர் துரை, சிம்புவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார். இவர் சிம்பு நடித்த தொட்டிஜெயா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாகவே சிம்பு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வரும் நிலையில் சிம்புவை இயக்கிய எனது அனுபவம் குறித்த பகிர முடிவு செய்தேன். நான் யாருடைய வற்புறுத்தல் காரணமாகவும் இதை கூறவில்லை. தொட்டிஜெயா படத்தை இயக்கிய போது சிம்பு எனக்கு கொடுத்த ஒத்துழைப்பை மறக்கவே முடியாது. தொட்டி ஜெயா' படம் ஆரம்பிக்கும் நிலையில் அவர் நடித்து இயக்கிய 'மன்மதன்' சூப்பர் ஹிட் ஆகியிருந்தது. இதனால் நான் என்னுடைய கதையில் சில மாற்றங்கள் செய்து அவரிடம் காண்பித்தேன். ஆனால் அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து 'இது உங்கள் ஸ்கிர்ப்ட், நீங்கள் உங்கள் மனதில் தோன்றியதை படமெடுங்கள், நான் ஸ்கிரிப்டில் தலையிட மாட்டேன், முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்' என்று கூறினார். இவ்வளவிற்கும் அவருக்கு மிக பிடித்தமான ஒரு காட்சியை நான் படத்தில் இருந்து தூக்கிவிட்டேன், அதற்கு கூட அவர் எந்தவித மறுப்பையும் தெரிவிக்கவில்லை.
தொட்டி ஜெயா' படத்தின் முதல் காட்சி படப்பிடிப்பின்போதும் சரி, நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்ட காட்சியின்போதும் சரி, தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்கள் ரயிலில் படப்பிடிப்பு நடந்தபோதும் சரி, சிம்பு சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்
படப்பிடிப்பு முடிந்த பின்னர் சிம்பு வீட்டில் தான் இந்த படத்தின் எடிட்டிங் நடந்தது. அவருடைய வீடாக இருந்தாலும் ஒருநாள் கூட எடிட்டிங் பணி நடக்கும் இடத்தில் அவர் வரவே இல்லை. எந்த ஒரு தலையீடும் அவர் செய்ததே இல்லை. நாங்களாகவே எடிட்டிங் முடிந்துவிட்டது வந்து படத்தை பாருங்கள் என்று சொன்னால் தான் உள்ளே வருவார்.
ஒரு படத்தின் இயக்குனர் மீதும், தயாரிப்பு நிறுவனத்தின் மீதும் அவர் முழு நம்பிக்கை வைத்துவிட்டால் அவர் அந்த படத்தை சின்சியராக முடித்து கொடுத்துவிடுவார், இதற்கு உதாரணமாக விண்ணை தாண்டி வருவாயா', அச்சம் என்பது மடமையடா' படங்களை கூறலாம். மேலும் அவர் பணத்திற்காக ஒருபோதும் பிரச்சனை செய்ததே இல்லை. படம் முடிந்த பின்னர் அட்ஜெஸ்ட் செய்து தனது சம்பளத்தை வாங்கி கொள்வார்
சிம்பு ஒரு மல்ட்டி டேலண்ட் கலைஞன். ஒவ்வொரு கலைஞனுக்கும் பாசிட்டிவ்வும் இருக்கும், நெகட்டிவ்வும் இருக்கும். எனவே சிம்புவிடம் உள்ள சில சின்னகுறைகளை பெரிதுபடுத்தி அவரை ஒதுக்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம். அவர் நிச்சயம் இன்னும் நிறைய படங்கள் நடித்து இயக்குவார், மிகப்பெரிய வெற்றியையும் பெறுவார். எனவே எந்த பிரச்சனையாக இருந்தாலும் சிம்புவிடம் உட்கார்ந்து பேசி ஒரு சுமூகமான முடிவை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments