Toilet-இல் ஸ்மார்ட் போன்கள்? கழிவறை இருக்கையைவிட மோசம்… அச்சுறுத்தும் புது ஆய்வு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கழிவறைக்கு செல்லும்போது செல்போன்களை எடுத்துச்செல்லும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலானோரிடம் அதிகரித்து இருக்கும் நிலையில் அவை கழிப்பறை இருக்கைகளைவிட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை தேக்கி வைக்கக் கூடியது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டி இருக்கிறது.
NordVPN மருத்துவ ஆய்விதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் கழிவறைக்குச் செல்லும்போது தங்களது ஸ்மார்ட் போன்களை கையோடு எடுத்துச் செல்கின்றனர். இந்த ஸ்மார்ட்போன்கள் கழிவறை இருக்கையில் இருக்கும் பாக்டீரியா கிருமிகளை விட 10 மடங்கு அதிகமான நோய்கிருமிகளை தேக்கி வைக்கக்கூடிய ஒன்று என்றும் அவை டிஜிட்டல் யுகத்தின் கொசுக்கள் என்றும் பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளின் இனப்பெருக்கம் செய்யும் இடம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
சமீபத்திய ஆய்வில் 10 இல் 6 பேர் தங்களது ஸ்மார்ட் போன்களை கழிவறைக்கு எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. இதில் வணிகம் நடத்தும் இளைஞர்கள்தான் அதிகம் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டு இருக்கிறது.
மேலும் 61.6% பேர் கழிப்பறை இருக்கையில் அமர்ந்து பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களை ஸ்க்ரோல் செய்து பார்ப்பதாக ஆய்வில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதில் 33.9% பேர் மேற்கண்ட சோஷியல் மீடியா பக்கங்களை ஸ்க்ரோல் செய்து பார்ப்பதற்காகவே பயன்படுத்துகின்றனர் என்றும் 24.5% தங்களது துணைகளுக்கு செய்தி அனுப்புவதற்காக பயன்படுத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஸ்மார்ட்போன்கள் மூளையை மழுங்கடித்து வருகிறது என்பதுபோன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. அவற்றையெல்லாம் விட ஸ்மார்ட்போன்கள் பாக்டீரியா பரவக்கூடிய சாதனம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
இந்த பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் கழிவறையில் ஒருநபர் அமர்ந்து இருக்கும்போது அவரது கை வழியாக ஸ்மார்ட் போன் ஸ்கீரினில் தங்கிவிடுவதாகவும் அப்படி தங்கும் கிருமிகள் பின்னர் நாள் முழுவதும் ஸ்மார்ட்போன்களைப் பயன்டுத்தும்போது கைவழியாகவே கண், வாய், மூக்கு வழியாக உடலுக்குள் பரவும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு நிபுணர் ஹக் ஹேடன் ‘ஸ்மார்ட் போன்கள் கழிப்பறை இருக்கைகளைவிட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை தேங்க வைக்கக்கூடியது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. டிஜிட்டல் யுகத்தின் கொசு’, மேலும் ஸ்மார்ட்போன்களில் தங்கும் பாக்டீரியா போன்ற கிருமிகள் 28 நாட்கள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது என்றும் கூறியுள்ளார்.
ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலும் ஸ்டோஃபிலோகோகஸ் ஆரியஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் கிருமிகள் தேங்கி விடுகிறது. அவை சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு நோய்த்தொற்றுகள், புண்கள், தோல் நோய்த்தொற்றுகள் போன்றவற்றை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர். அதேபோல சைனசிடிஸ் போன்ற சுவாச நோய்த்தொற்றுகளையும் இந்த கிருமிகள் ஏற்படுத்துகின்றன.
ஒருவேளை செல்போன் ஸ்கீரின்களில் தான் பிரச்சனை, எனவே இயர்பட்கள் மற்றும் கெஜெட்டுகளை பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் எழலாம்.
உண்மையில் ஸ்மார்ட்போன்களில் எப்படி பாக்டீரியா நோய்கிருமிகளின் தாக்கம் இருக்குமோ? அப்படியே இயர்பட்கள் மற்றும் கேஜெட்டுகளிலும் இந்த நோய்த்தாக்கம் இருக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments