அமெரிக்காவில் ஹிட் அடித்த ட்ரம்பின் பாலிவுட் மஸ்தானி
- IndiaGlitz, [Wednesday,February 26 2020]
உலகம் முழுவதும் ட்ரம்ப்பின் புகைப்படங்களை நெட்டிசன்கள் டிசைன் டிசைனாக கலாய்த்து வருவது வழக்கம். தற்போது ட்ரம்பின் இந்திய வருகையால் ட்ரம்ப்பை வல்லமை பொருந்தியவராக நெட்டிசன்கள் மார்ப்பிங் செய்து அசத்தி காட்டியது அமெரிக்காவிலும் பலரால் வரவேற்கப் பட்டு வருகிறது.
ட்ரம்ப் இந்தியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா கிளம்பிய நிலையில் அவரது உதவியாளர் டான் ஸ்கேவினோ தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல ஹிந்தி பாடலில் ஆடுவது போன்ற வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ரன்வீர் கபூர், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து ஹிட்டான் “பாஜிராவ் மஸ்தானி” படத்தின் பாடலில் தான் அதிபர் ட்ரம்ப் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார. இப்படி மார்ப்பிங் செய்யப் பட்ட பாடல் தற்போது அமெரிக்காவிலும் பிரமலமடைந்து வருகிறது. அந்தப் படத்தில் ரனவீர் கபூர் “மல்ஹாரி” என்ற பாடலுக்கு சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார். அந்த நடன காட்சிகளில் தற்போது ட்ரம்ப் வலம் வந்து கொண்டிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
அதிபர் ட்ரம்ப்பின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவது இது முதல் முறையல்ல. முன்னதாக அவரே ராக்கி 3 திரைப்படத்தில் குத்துச் சண்டை வீரராக வரும் சில்வஸ்டர் ஸ்டாலோனின் உடலுடன் பொருத்தி போட்டோஷாப் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த நவம்பரில் வெளியிட்டார். இந்த போடோஷாப், தான் “ரஷ்யாவிற்கு ஆதரவளான் இல்லை” எனக் காட்டுவதற்காக பகிரப் பட்டது என்ற விமர்சனங்களும் அப்போது எழுந்தது.
ட்ரம்ப்பின் இந்திய வருகைக்கு முன்பு நமது நெட்டிசன்களும் சும்மா இருக்காமல் பாகுபலி வீடியோக்களை ட்ரம்புடன் பொருத்தி உருவாக்கி இருந்தனர். பாகுபலி -2 திரைப்படத்தில் பிரபாஸ் முகத்திற்கு பதிலாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய ஊடகங்களில் கலக்கி இருந்தார். இந்தியாவில் மிகப் பெரிய வசூலைக் குவித்து வெற்றி பெற்ற பாகுபலி காட்சியில் ட்ரம்ப் இருப்பதாக மார்ப்பிங் செய்யப் பட்ட காட்சிகளை அமெரிக்க அதிபர் இந்தியா வருவதற்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த பதிபு sol என்ற டிவிட்டர் கணக்கில் இருந்து பதிவிடப்பட்டு இந்தியாவில் கடந்த சில தினங்களாக சக்கைப் போடு போட்டது. அதிபர் ட்ரம்ப் வல்லமை பொருந்திய நாட்டிற்கு தலைவர் என்று பார்க்கப் படும் அதே வேளையில் நெட்டிசன்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல கலை உணர்வோடு வலம் வருவது வரவேற்கத் தக்கதாகவே இருக்கிறது.