ஹாலிவுட்டை பார்த்தாலே பயமாக இருக்கிறது… பகீர் கருத்தை வெளியிட்ட 'ஸ்பைடர்மேன்' நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் ஸ்பைடர்மேனாக நடித்து உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஒருவர் ஹாலிவுட் எனக்கானது இல்லை, அது என்னை பயமுறுத்துகிறது என்று கருத்து தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்தவரான டாம் ஹாலண்ட் சிறிய வயதிலேயே ஹாலிவுட் சினிமாவிற்குள் நுழைந்தவர். இவரது நடிப்பு விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று பலமுறை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 18 வயதிலேயே ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலமான இவர் தொடர்ந்து மார்வெல் திரைப்பட உலகின் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.
அந்த வகையில் கடந்த 2016 இல் ‘கேப்டன் அமெரிக்க சிவில் வார்‘ தொடர்ந்து 2017 இல் ‘ஸ்பைடர்மேன் , ஹோம்கம்மிங்‘, 2018 இல் ‘அவென்ஜர்ஸ்-இன்பினிட்டி வார்‘, 2019 இல் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், ஸ்பைடர் மேன்-பார் பிரம் ஹோம்‘ என்று ஹாலிவுட் சினிமாவில் பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் 27 வயதான இவர் பிரபல மாடலும் தன்னுடைய நடித்த நடிகையுமான ஜெண்டயா என்பவரை காதலித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஆன் பர்பஸ் வித் ஜே ஷெட்டி போட்காஸ்டில் பேசிய நடிகர் டாம் ஹாலண்ட் ‘நான் திரைப்படம் தயாரிப்பின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் எனக்கு ஹாலிவுட் பிடிக்கவில்லை. அது எனக்கானது அல்ல. அதன் வியாபார உத்தி என்னை பயமுறுத்துகிறது. நானும் அந்த வியாபாரத்தின் ஒரு அங்கம்தான் என்பதை அறிவேன். அதனுடனான தொடர்புகளை ரசிக்கிறேன். ஆனால் அதை என்னிடமிருந்து விலக்கி வைப்பதற்கான வழிகளை எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
முடிந்தவரை ஒரு சராசரி வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். எனக்கு முன்னால் வந்த எத்தனையோ பேர் தங்களின் சுய அடையாளத்தை இழந்ததைப் பார்த்திருக்கிறேன். என்னுடன் வளர்ந்த நண்பர்கள் யாரும் இப்போது எனக்கு நண்பர்களாக இல்லை. காரணம் நான் என்னை இந்த வியாபாரத்தில் இழந்துவிட்டேன். என் குடும்பம் என் நண்பர்கள் என என்னை மகிழ்விக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையை குறித்து பேசிய டாம் ஹாலண்ட், என் வாழ்க்கையில் ஜெண்டயாவைப் போன்ற ஒருவர் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைத்தவிர தன்னுடைய குடிப்பழக்கம் குறித்து பேசிய அவர் குறைந்தது ஆறு மாதங்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து வெளிவர முயற்சித்தேன். அந்த நாட்களில் ஆரோக்கியமான உணர்ந்தேன். உடற்தகுதியுடன் இருப்பதைப் போன்றும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்றும் உணர்ந்தேன் என்று நடிகர் டாம் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவில் நடக்கும் வியாபார உத்தி என்னை பயமுறுத்துகிறது, அதைவிட்டு விலகியிருக்க முயற்சிக்கிறேன் என்று பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்துவரும் நடிகர் டாம் ஹாலண்ட் கூறியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments