கொரோனாவால் இறந்து 14 நாள் கடந்தும்… உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்கும் மருத்துவமனை!!! கொடூரச் சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெங்களூரு அடுத்த ஸ்ரீநகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த முதியவரின் உடலை ஒப்படைக்க அந்த மருத்துவமனை நிர்வாகம் ரூ.5,45,000 பணம் கேட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு அடுத்த ஹாசன் பகுதியில் வசித்து வந்தவர் சுவாமி (62). இவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாத்தில் அவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஸ்ரீநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதையடுத்து நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்த மாதம் 11 ஆம் தேதி சுவாமி கொரோனாவின் தீவிரத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். அதையடுத்து உடலைப் பெற்றுக் கொள்ள அவருடைய மனைவிக்குத் தகவல் சொல்லப்பட்டு இருக்கிறது. உயிரிழந்த சுவாமியுடன் அவரது மனைவிக்கு நீண்ட நாட்களாகத் தொட்பே இல்லாமல் இருந்ததால் காலதாமதமாக அவர் மருத்துவமனையை அணுகியிருக்கிறார்.
உடலைப் பெற்றுக்கொள்ள வந்த அவரிடம் உங்கள் கணவரின் மருத்துவச் செலவுக்கு ரூ.5 லட்சத்து 45 ஆயிரம் செலவாகி இருக்கிறது. அதைக் கொடுத்து விட்டு உடலை எடுத்துச் செல்லுங்கள் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இச்செய்தியைக் கேட்ட அவர் அதிர்ந்தே போயிருக்கின்றனர். மேலும் உடன் வந்த சுவாமியின் உறவினர்கள் நாங்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வருகிறோம். எங்களால் அவ்வளவு பணம் எல்லாம் கொடுக்க முடியாது. ஒரு 2 லட்சத்தை புரட்டிக் கொண்டு வருகிறோம். உடலைக் கொடுத்து விடுங்கள் எனக் கேட்டு இருக்கின்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் உடலை ஒப்படைக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டிற்கு திரும்பி சென்ற உறவினர்கள் சுவாமிக்கு திதியும் கொடுத்து இருக்கின்றனர். இந்நிலையில் மனம் வெதும்பிய சுவாமியின் மனைவியை பார்த்த உறவினர்கள் ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர். அப்போது ரூ.2 லட்சத்தோடு பிளாங்க் செக் ஒன்றை கொடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.
இதனால் பிளாங்க் செக் எல்லாம் கொடுக்க முடியாது எனத் தெரிவித்து விட்டு மீண்டும் வீட்டிற்கே திரும்பி இருக்கின்றனர் சுவாமியின் உறவினர்கள். இந்நிலையில் 10 நாட்கள் கடந்தும் உடல் மருத்துமனையிலேயே இருந்ததால் வந்து பெற்றுக் கொள்ளுமாறு மீண்டும் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. எனவே சுவாமியின் உறவினர்கள் மருத்துவனைக்கு சென்றிருக்கின்றர்.
அப்போது சென்ற உறவினர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி, அதாவது சுவாமியை மருத்துவமனையில் அனுமதிக்கும்போது நிர்மலா என்ற பெண் அவருடைய மனைவி எனக் கூறி கையெழுத்து இட்டு இருக்கிறார். அந்த பெண் நிர்மலா யாரேன்றே தெரியாத நிலையில் எப்படி உங்களிடம் உடலை ஒப்படைப்பது என மருத்துவமனை நிர்வாகம் கேள்வி எழுப்பி இருக்கிறது. இத்தனை பிரச்சனைக்கு நடுவில் கொரோனாவால் உயிரிழந்த சுவாமியின் உடல் 14 நாட்கள் கடந்து இன்னும் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments